Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கத்தி முனையில் வாலிபரிடம் வழிப்பறி… 2 ரவுடிகள் கைது-திருச்சி க்ரைம்

கத்தி முனையில் வாலிபரிடம் வழிப்பறி... 2 ரவுடிகள் கைது-திருச்சி க்ரைம்

கத்தி முனையில் வாலிபரிடம் வழிப்பறி பணம் பறிப்பு

திருச்சி ஜூலை 30 – திருச்சியை அடுத்தக் கல்லடிப்பட்டி வெள்ளியனூர் கிழக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி (வயது 30) இவரது மனைவி திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகாமையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் அவரைப் பார்ப்பதற்காகப் பாலாஜி மத்திய பஸ் நிலையம் அருகாமையில் உள்ள ஒரு ஹோட்டல் முன்பு நடந்து மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று மர்ம ஆசாமிகள் கத்தி முனையில் அவரை வழிமறித்து அவரது செல்போன் மற்றும் சட்டை பாக்கெட்டில் இருந்த ரூபாய் 30 ஆயிரம் பணம் ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர் இதுகுறித்துப் பாலாஜி கொடுத்த புகாரின் அடிப்படையில் தாராநல்லூர் கீரை கடை தெரு பகுதியைச் சேர்ந்த ஹசன் அலி (வயது 28) திருச்சி இபி ரோடு வேதாத்திரி நகர் சுடர் என்கிற சுடர் வேந்தன் (வயது 27) ஆகிய இரண்டு ரவுடிகள் மற்றும் தாராநல்லூர் காமராஜ் நகரை சேர்ந்த பிரகாஷ்ராஜ் (வயது20) ஆகிய மூன்று பேரை கண்டோன்மென்ட் போலீசார் கைது செய்தனர்.

காணாமல் போன இளம் பெண் மாலத்தீவு சென்றாரா?

திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிராஜுதீன் (வயது 52) இவரது 25 வயது மகள் திருச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார் கடந்த ஜூன் 10 ந் தேதி இவர் காலையில் வேலைக்குச் செல்வதாகக் கூறி விட்டுப் புறப்பட்டுச் சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாகச் சிராஜுதீன் பல்வேறு இடங்களில் மகளைத் தேடிப் பார்த்தார். ஆனால் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. பின்னர் 8 நாட்கள் கழித்து அவருக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்தது. எதிர் முனையில் பேசியவர் உங்கள் மகள் மாலத்தீவு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார் எனக் கூறியுள்ளார். மற்றபடிவேறு எந்தத் தகவலையும் கூறாமல் செல்போன் இணைப்பை துண்டித்து விட்டனர்.இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிராஜுதீன் வீட்டிலிருந்த மகளின் பாஸ்போர்ட்டை தேடிப் பார்த்தார். அப்போது பாஸ்போர்ட்டை காணவில்லை ஆகவே அவர் மாலத்தீவு சென்று இருக்கலாம் என நினைத்தார். இருந்தபோதிலும் அவருக்குப் பெரிய குழப்பம் ஏற்படவே மகளைத் தேடி கண்டுபிடித்துத் தருமாறு சிராஜுதீன் கேகே நகர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப் பதிவு செய்து
மாலத்தீவுக்குத் தான் சென்றாரா அல்லது வேறு எங்காவது இருக்கிறாரா? என்பது குறித்து
விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் சாவில் மர்மம் ..தங்கை போலீசில் புகார்

திருச்சி லால்குடி வில்லனுர் வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் தெய்வநாதன் இவரது மகள் சிம்லா (வயது 51) இவருக்குத் திருமணம் ஆகவில்லை இவர் ஒரு நபர் உடன் திருமணம் ஆகாமல் திருச்சி மிளகு பாறை பகுதியில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.இந்த நிலையில் இலியோ ஜேக்கப் சிம்லாவின் சகோதரி ஜுலி சுஜாதாவுக்குத் தொடர்பு கொண்டு சிம்லா இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். பின்னர் அவர் கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் தனது சகோதரியின் சாவில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.அதன் அடிப்படையில் கண்டோன்மெண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

error: Content is protected !!