கிருஷ்ணகிரியை சேர்ந்த குடும்பத்தினர் திருப்பதி கோயியில் தரிசனத்தை முடித்துவிட்டு காரில் வீடு திரும்பி கொண்டிருந்தபோது, ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், பலத்த காயமடைந்த மேலும் 5 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
