அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஜூபிலி ரோட்டு தெருவை சேர்ந்த முகமதுபாரூக் என்பவரது மகன் அன்வருதீன் (33) (ஹோட்டல் உரிமையாளர்) என்பவர் கும்பகோணத்தைச் சேர்ந்த பைரோஸ்கான் என்பவரை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து ஜூப்ளி ரோட்டு தெருவில் தனி குடும்பமாக வசித்து வந்தனர். இந்நிலையில் இவர்களுக்கு குழந்தை இல்லை இதன் காரணமாக கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து பைரோஸ்கான் தனது தந்தை வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே மனம் உடைந்த நிலையில் காணப்பட்ட அன்வருதீன் இன்று அதிகாலை 4 மணி அளவில் வீட்டில் யாரும் இல்லாத போது தனது மனைவியின் துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அன்வருதீன் தந்தை முகமதுபாரூக் மனம் நொந்த நிலையில் உள்ள தனது மகனை அதிகாலையில் தேடிப் பார்த்த நிலையில் வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியில் தனது மனைவியின் துப்பட்டாவால் தூக்கிட்டு இறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்திற்கு புகார் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று
அன்வருதீன் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.இந்த சம்பவம் ஜெயங்கொண்டம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..