துபாயிலிருந்து பெங்களூரு விமான நிலையம் வழியாக 14 கிலோ தங்கத்தை கடத்தி வந்த வழக்கில், ‘வாகா’ பட நடிகை ரன்யா ராவிற்கு சுங்கத் துறை ரூ.89 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. அவர் கடந்த ஓராண்டில் மட்டும் சட்டவிரோதமாகச் சுமார் 113 கிலோ தங்கத்தைக் கடத்தியிருப்பது தொடர் விசாரணையில் கண்டறியப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக ஓராண்டு காலம் சிறைவாசம் அனுபவித்து வெளிய வந்த நிலையில், தற்போது அவருக்கு இந்த ரூ.89 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தங்கம் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவிற்கு ரூ.89 கோடி அபராதம்
