அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதையொட்டி, அனைத்து அணிகளும் தங்களது வீரர்கள் தக்கவைப்பு, விடுவிப்பு மற்றும் வீரர்கள் பரிமாற்றம் தொடர்பான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றன. ஏற்கனவே சில அணிகள் வீரர்கள் பரிமாற்றம் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. இந்நிலையில், அடுத்த சில நாட்களில் முன்னணி வீரர்கள் தொடர்பான முக்கிய பரிமாற்ற அறிவிப்புகள் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த மாதம் தொடக்கம்.. சூடுபிடிக்கும் ஐபிஎல் வீரர்கள் ஏலம்
