கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் வெவ்வேறு பிரச்சனை சம்பந்தமாக இருவர் தீக்குளிக்க முயற்சி – காவல்துறை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது கூட்டத்தின் போது, வெவ்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கரூர் ராயனூர் பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவர், தனது மனைவி மற்றும் குழந்தை கடந்த 15 நாட்களாக காணாமல் போனது தொடர்பாக தான்தோன்றிமலை காவல் நி

லையத்தில் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டினார். இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றார். அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் அவரை தடுத்து நிறுத்தி, தண்ணீர் ஊற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அதேபோல், அரவக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த காளீஸ்வரி என்ற பெண்மணி, நிலப்பிரச்சினை தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி தீக்குளிக்க முயன்றார். அவரையும் அங்கிருந்த காவல்துறையினர் உடனடியாக தடுத்து நிறுத்தி பாதுகாப்பாக மீட்டனர்.
ஒரே நேரத்தில் இரண்டு பேர் வெவ்வேறு பிரச்சினைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
