Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி ஏர்போட்டில் ரூ.22.67 லட்சம் மதிப்புள்ள சிகரெட்டுகள் பறிமுதல்

: Indian Customs and Air Intelligence Unit officers inspecting seized cartons of foreign cigarettes at Tiruchirappalli International Airport in June 2026

திருச்சி விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த விமான பயணிகளிடம் ரூ.22.67 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள், மின்னணு சாதனங்கள் பறிமுதல்

திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர் மலேசியா, இலங்கை உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கு தினசரி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் வந்த பயணிகளிடம் இந்திய வான் நுண்ணறிவு பிரிவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது மூன்று பயணிகள் தங்களது உடமைகளில் மறைத்து கொண்டு வந்த வெளிநாட்டு சிகரெட்டுகள், உயர்தர செல்போன்கள், டேப்லெட்டுகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கண்டறியப்பட்டன

இதையடுத்து ரூ.22.67 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் மின்னணு சாதனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் குறித்து சம்பந்தப்பட்ட பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் குறித்து சம்பந்தப்பட்ட பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!