Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தியேட்டரில் சடலமாக கிடந்த வாலிபர்.. .திருச்சி க்ரைம்

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

கத்தியை காட்டி மிரட்டிய ரவுடி கைது

திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் டேவிட் தெருவை சேர்ந்தவர் நாகேந்திரன்.இவர் நேற்று அரியமங்கலம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக வந்த பாலக்கரை துரைசாமிபுரத்தை சேர்ந்த ஜாகிர் உசேன் (வயது 46) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி ரூ 1000 பணத்தை திருடி சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து நாகேந்திரன் போலீசில் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில்போலீசார் வழக்கு பதிவு செய்து ஜாகிர் உசேனை கைது செய்துள்ளனர் அவரிடம் இருந்து பணம் மற்றும் கத்தியை பறிமுதல் செய்துள்ளனர்.

பள்ளி வேன் மோதி சிறுவன் சாவு

திருச்சி ஏர்போர்ட் காமராஜர் நகர் திலகர் தெருவை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 46 )இவரது மகன் சுரேஷ் (வயது 15 )இவர் நேற்று திருச்சி ஏர்போர்ட் குலாப்பட்டு ரோடு வளவன் நகர் இரண்டாவது தெரு பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது எதிரே அந்த வழியாக வந்த தனியார் பள்ளி வேன் எதிர்பாராதமாக சுரேஷ் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சுரேஷ் ஆபத்தான நிலையில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி சுரேஷ் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


வாலிபர் மாடியில் இருந்து தவறி விழுந்து சாவு

திருச்சி காந்தி மார்க்கெட் கிருஷ்ணாபுரம் பாரதி நகரை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 34) இவர் குடிபோதையில் நேற்று முன்தினம் வீட்டில் மாடியில் இருந்து கீழே விழுந்து வலது பக்க விலா எலும்பில் உள் காயம் அடைந்தார். இதையடுத்து அவரை ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சக்திவேல் நேற்று பரிதாபமாக இறந்தார் இந்த சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா நடத்தி வருகின்றனர்.

சினிமா தியோட்டரில் சடலமாக கிடந்த வாலிபர்

திருச்சி தென்னூர் காயிதே மில்லத் நகர் சேர்ந்தவர் அப்துல்லா. இவரது மகன் சையது அபுதாஹிர் (வயது 31) இவர் நேற்று திருச்சி மதுரை ரோட்டில் உள்ள சினிமா தியேட்டரில் படம் பார்க்க சென்றிருந்தார். அப்பொழுது நாற்காலியில் அமர்ந்திருந்த சையது அபுதாஹீர் துரதிஷ்டமாக அமர்ந்த நிலையில் இறந்து விட்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சினிமா தியேட்டர் ஊழியர் உடனடியாக காந்தி மார்க்கெட் போலீசா ருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நாற்காலியில அமர்ந்தபடி இறந்த சையது அபுதாகிர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் சையது அபுதாஹீர் நெஞ்சு வலியால் இறந்திருக்கலாம் என்று சந்தேகப்படுகின்றனர்.இந்த சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சினிமா தியேட்டரில் வாலிபர் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!