Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாமியார் வீட்டில் அவமானம்: வாலிபர் தற்கொலை

சென்னை வியாசர்பாடி சர்மா நகர் 12வது தெருவில் வசித்து வந்தவர் ஜெகன்நாத் (33). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஏஞ்சலினாமேரி. இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், தம்பதி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுவந்துள்ளது. இதன்காரணமாக கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஏஞ்சலினா மேரி, வியாசர்பாடியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதன்பிறகு மனைவியை அழைத்துவர ஜெகன்நாத், மாமியார் வீட்டுக்கு சென்றபோது அங்கு பிரச்னை ஏற்பட்டபோது ஏஞ்சலினாமேரியின் தாய்மாமன் சதீஷ் ஆகியோர் சேர்ந்து ஜெகன்நாத்தை தாக்கியுள்ளனர்.

இதில் அவமானம் அடைந்த ஜெகன்நாத் தனது வீட்டிற்கு வந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி அறிந்ததும் ஏஞ்சலினா மேரி சென்று கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார். பின்னர் போலீசார் வந்து உடலை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுசம்பந்தமாக எம்கேபி. நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் முழு விவரமும் கிடைக்கப்பெற்ற நிலையில் ஜெகன்நாத் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் என்றும் அவரது உடலில் லேசான காயங்கள் இருப்பதும் தெரியவந்தது.

இதனிடையே ஜெகன்நாத்தை தற்கொலைக்கு தூண்டியதாக ஏஞ்சலினா மேரி, அவரது தாய் மேரி மற்றும் தாய்மாமன் சதீஷ்குமார் (24) ஆகிய மூன்று பேரை நேற்று கைது செய்தனர். தற்கொலைக்கு தூண்டிய வழக்கு உள்ளிட்ட 4 பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!