Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கணவன் முன்பே மனைவியிடம் தவறாக நடந்த- வாட்டர்மெலன் திவாகர்.. குற்றசாட்டு

சோசியல் மீடியா பிரபலமான வாட்டர் மெலன் ஸ்டார் சுதாகர் பூவிருந்தவல்லி அருகே நசரத்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு புகார் ஒன்றை அளித்தார். அதில் பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் தனியார் தொலைக்காட்சி சார்பில் நடக்கும் குக் வித் கோமாளி படப்பிடிப்பிற்காக சென்று படப்பிடிப்பு நடந்த நிலையில் அங்கு தன்னுடன் படப்பிடிப்பு தளத்தில் இருந்த கானா வினோத், மாகாபா ஆனந்த், புகழ், அசார் ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு தன்னை இரும்பு கம்பியால் அவர்கள் தாக்கியதாகவும் இதில் தனக்கு காயம் ஏற்பட்ட நிலையில் இதுகுறித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நசரத்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். இந்த புகாரின் பேரில் நசரத்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு

வருகின்றனர். இதனிடையே புகார் குறித்து விளக்கம் அளிக்க நடிகர் புகழ்,கானா வினோத் ஆகியோர் நசரத்பேட்டை காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்த நிலையில் இன்று மீண்டும் மகபா,புகழ், கானா வினோத்,அசார் ஆகிய 4 பேரும் வழக்கறிஞர்களுடன் ஆஜராகினர்.காவல் நிலையத்தில் திவாகர் விளம்பரத்திற்காக திட்டமிட்டு இது போன்ற புகாரை முன் வைத்துள்ளாதாக தெரிவித்த அவர்கள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்தனர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள்
குக் வித் கோமாளி ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த பெண்களை தரைக்குறைவாக பேசினார்.இதனால் அவரை அங்கிருந்து வெளியேற்றிவிட்டனர்.

விளம்பரத்திற்காக திவாகர் இது போன்று செய்து வருவதாகவும், மூன்றில் இருந்து ஆறு மாதத்திற்கு ஒரு முறை கண்டன்டுக்காக திவாகர் இது போன்ற செயலில் ஈடுபடுவதாகவும், மாகாபா தெரிவித்தார்.
தமிழ் புத்தாண்டு அன்று காவல் நிலையம் வர வேண்டும் என்று எனக்கு இருக்கிறது என்றும் கானா வினோத் கூறுகையில் ஷூட்டிங் ஸ்பாட்டில்
பெண்களை தரைகுறைவாக பேசியும் சேரி என்றும்
சாதியை கூறி தவறாக பேசினார் என்றார். இதேபோல் புகழ் பேசுகையில் திவாகர் தன் வளர்ச்சியை தடுக்கிறார் என்று பேசுகிறார் எப்போது அவர் வளர்ந்தார் என்று தெரியவில்லை என்றார்.

error: Content is protected !!