Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி அருகே பரபரப்பு! பட்டாசால் குடிசை வீடு எரிந்து சேதம்

திருச்சி அருகே பரபரப்பு! பட்டாசால் குடிசை வீடு எரிந்து சேதம்

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள காளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனியாண்டிஇவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில்நேற்று முன்தினம் இவரது வீட்டின் அருகே மூதாட்டி ஒருவர் இறந்துவிட்டார் .இதையடுத்து அவரது உடலை சுடுகாட்டுக்கு உறவினர்கள் எடுத்துச் சென்றனர். அப்பொழுது சிலர் கபட்டாசு வெடித்த போது பழனியாண்டி வீட்டின் கூரை மீது தீப்பொறி விழுந்து திடீரென்று கூரை வீடு தீப்பிடித்து எரிய தொடங்கியது.காற்றுப் பலமாகப் பேசியதால் தீ சிறிது நேரத்தில் மள மள எனப் பற்றி எரிந்து குடிசை வீடு முழுவதும் தெரிந்து நாசமானது. இதற்கிடையில் தகவல் இருந்து துறையூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சுமார் 20 நிமிடம் போராடி தீயை அணைத்தனர். இந்தத் தீ விபத்தில் குடிசை வீட்டிலிருந்த அனைத்துப் பொருட்கள் மற்றும் வீட்டுப் பத்திரம், பணம்,நகை போன்றவை கருகியது.இந் தீ விபத்துக் குறித்துத் தகவல் அறிந்து துறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!