Skip to content

அன்புமணிக்கு ஒரு தகப்பனாக அனைத்தையும் செய்தேன்… கதறி அழுத ராமதாஸ்

ஒரு கும்பல் என்னை தூற்றுகிறது. என்னையும் கவுரவத் தலைவரைவும் ஒரு கும்பல் மிகக் கேவலமாக தூற்றுகிறது என ராமதாஸ் கண்ணீர் மல்க பேசினார்.

சேலத்தில் நடக்கும் பாமக செயற்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேச்சு…

உலகத்தை ஒரு பிள்ளைக்கு தந்தை என்ன செய்வாரோ அதைவிட அதிகமாக நான் செய்துள்ளேன்.

நான் வளர்த்தவர்களை வைத்து ஒவ்வொரு நாளும் என்னை அவமானப்படுத்துகிறார்கள்.

என்னை வெட்டிகூட வீசியிருக்கலாம். ஆனால் ஒவ்வொரு நாளும் அவமானப்படுத்துகின்றனர்.

என்னை விட ஜி.கே. மணியை அவமானப்படுத்துகின்றனர்.

தூக்க மாத்திரை போட்டாலும், எனக்கு தூக்கம் வரவில்லை. எனது ஆதங்கத்தை கொட்டிதீர்க்க ஒருமணிநேரம் தேவைப்படும்.

பாமகவில் 95% பேர் என் பக்கம்தான் உள்ளனர். அன்புமணி பின்னால் 5% பேர் கூட இல்லை.

வன்னியர்களக்கு 10.5% இடஒதுக்கீட்டை, உறுதியாக பெறுவோம்.

நான் நினைத்திருந்தால் இந்திய அளவில் எந்த பதவியை வேண்டுமானாலும் பெற்றிருக்கலாம்.

யாருடன் கூட்டணி அமைப்பது? என்பது தொடர்பாக விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும்.

என் முதுகில் குத்திவிட்டார் அன்புமணி. மார்பில் போட்டு வளர்த்த மகன் அன்புமணி, எனது முதுகில் குத்திவிட்டார்.

யாருடன் கூட்டணி என மாவட்ட செயலாளர்களிடம் கருத்து கேட்டேன்.

அன்புமணிக்கு எந்த குறையும் வைக்கவில்லை.. ஒரு தகப்பனாக அனைத்தையும் செய்தேன்.

சில்லறை பசங்களை வைத்து என்னை தினந்தோறும் அன்புமணி அவமானப்படுத்துகிறார்.

மிகப்பெரிய வெற்றிக் கூட்டணி நிச்சயம் அமைக்கப்படும். என்று இவ்வாறு தெரிவித்தார்.

error: Content is protected !!