தொடர்ந்து 25 ஆண்டுகள் மக்கள் சேவை ஆற்ற வாய்ப்பளித்த நாட்டு மக்களுக்கு தலைவணங்குவதாக டெல்லியில் இன்று (அக்.7) நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். “இன்று நான் எந்த நிலையில் இருந்தாலும், எந்த பொறுப்பை வகித்தாலும் அதற்கான முழு பெருமையும் மக்களுக்கே உரியது; கோடிக்கணக்கான இந்தியர்களின் நம்பிக்கையும் கட்சி தொண்டர்களின் உழைப்புமே எனது பலம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இரவும் பகலும் அயராது சேவை செய்ய இறைவனிடம் கேட்க வேண்டும் என்பதே தனது பிரார்த்தனை என்று அவர் பேசியுள்ளார்.
மக்களின் ஆசீர்வாதத்தால் இவ்வளவு தூரம் உயர்ந்துள்ளேன் – பிரதமர் மோடி
