தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது X-தளத்தில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது…
தமிழ்நாட்டிற்காகவும் தமிழர் உரிமைக்காகவும் தியாகிகளையும் தீரர்களையும் வாரி வழங்கிய விருதுநகர் மண்ணில் நாளைய தினம் நடைபெற இருக்கிறது கழக இளைஞர் அணியின் தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு!.

கழகத் தலைவர் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
@mkstalin அவர்கள் தலைமையில் தமிழ்நாட்டின் மண்-மொழி-மானம் காத்துப் புதிய வரலாறு படைக்க, தென் மண்டல தீரர் படையே திரண்டு வாரீர்! கல்குறிச்சி கலைஞர் திடலில் சந்திப்போம்! என இவ்வாறு தெரிவித்துள்ளார்.

