Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெரம்பலூர்….வாக்காளர்களுக்கு ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து நன்றி

பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்ட இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் டாக்டர் பாரிவேந்தருக்கு வாக்களித்தவர்களுக்கும், தேர்தல் பணியாற்றிவர்களுக்கும் ஐஜேகேதலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து நன்றி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக டாக்டர் ரவிபச்சமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பொதுத்தேர்தலில் வெற்றி வாகை சூடி புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள மக்களவை உறுப்பினர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
வாரணாசி தொகுதியில் மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெற்று, இந்தியாவை ஆளப்போகும் பாரதிய ஜனதா கட்சிக்கும், பிரதமர் மோடிக்கும் வாழ்த்துகள்.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பெரம்பலூர் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிட, இந்திய ஜனநாயக கட்சிக்கு வாய்ப்பளித்ததற்காக பாஜகவினருக்கு ம்  கூட்டணி கட்சியினர் அனைவரும் நன்றி் தெரிவித்து  கொள்கிறேன்.
வெற்றி என்பது நிரந்தரமல்ல. தோல்வி என்பது இறுதியானதுமல்ல என்ற பொன்மொழி அரசியல் களத்தில் இருக்கும் அனைவருக்கும் பொருந்தும்.
ஒருவருக்கு வாழ்வும், தாழ்வும் உலக இயற்கை; அந்த இரு நிலைமையிலும் நடுநிலையாக இருந்து உறுதியுடன் வாழ்வதே பெரியோருக்கு அழகு.
அந்த வகையில் டாக்டர் பாரிவேந்தர் இனி கட்சி பணியானாலும், கல்வி சேவையானாலும், மருத்துவ சேவையானாலும் தொடர்ந்து மக்களுக்காக பணியாற்றி முத்திரை பதிப்பார்.
பெரம்பலூர் தொகுதியில் டாக்டர் பாரிவேந்தருக்காக வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் கோடானு கோடி நன்றிகளை  தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு ரவி பச்சமுத்து கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!