Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

எலும்பை உடைச்சிருவேன்.. தலை இருக்காது.. மிரட்டிய அரசு கால்நடை மருத்துவர்

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே பசு மாட்டிற்கு சிகிச்சை பெற வந்த இளைஞரை அரசு கால்நடை மருத்துவர் ஆபாசமாக திட்டி, “எலும்பை உடைத்து விடுவேன்” என மிரட்டல் விடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மரக்காணம் அருகே உள்ள கூனிமேடு ஊராட்சி, அம்பேத்கர் நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சதாசிவம் (28). இவர் வீட்டில் வளர்த்து வரும் இரு பசு மாடுகளில் ஒன்றிற்கு இன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரது மகன் சந்துரு பசு மாட்டை சிகிச்சைக்காக அதே பகுதியில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பணியில் இருந்த கால்நடை மருத்துவர் சங்கரநாராயணன் பசு மாட்டை பரிசோதித்து சிகிச்சை அளித்துள்ளார்.

நான் 50-ம் வகுப்பு படிச்சவன் சிகிச்சை முடிந்ததும் நாளைக்கு எத்தனை மணிக்கு மாட்டை மறுபடியும் அழைத்து வர வேண்டும்? என்று சந்துரு மருத்துவரிடம் கேட்டுள்ளார். இந்த சாதாரண கேள்வியால் ஆத்திரமடைந்த மருத்துவர் சங்கரநாராயணன், சந்துருவை பார்த்து தகாத வார்த்தைகளால் கடுமையாக திட்டியுள்ளார். 209 எலும்பையும் அடிச்சு உடைச்சிருவேன், உடம்பு மட்டும்தான் இருக்கும் தலை இருக்காது, அறுத்திருவேன் ராஸ்கல். உனக்கும் எனக்கும் 5 லட்சம் படி வித்தியாசம் நீ 5-ம் வகுப்பு நான் 50-ம் வகுப்பு படிச்சவன். என் படிப்பை படிக்க உனக்கு 2000 ஜென்மம் வேணும்.

10 IAS அதிகாரிகள் சப்போர்ட்ல தான் நான் இங்க இருக்கேன் என்று மிகக் கொச்சையான வார்த்தைகளால் மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். அப்போது, அங்கு தன் ஆட்டிற்கு சிகிச்சை பெற வந்த பெண் ஒருவரும் மருத்துவரின் இந்த பேச்சைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார். சந்துரு இச்சம்பவத்தை தன் செல்போனில் வீடியோ எடுப்பதைக் கண்ட மருத்துவர், வீடியோ எடுக்கக் கூடாது என மீண்டும் மிரட்டியுள்ளார்.

இந்த மிரட்டல் வீடியோ தற்போது வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பொதுமக்கள் மத்தியில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சந்துரு, மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இச்சம்பவம் குறித்து மாவட்ட கால்நடைத் துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

error: Content is protected !!