சென்னை அருகே சட்டவிரோத மதுபான விற்பனையை தடுக்க தவறிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.
திருவொற்றியூர் போலீஸ் ஸ்டேஷனில் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் தற்போது விடுமுறையில் இருக்கிறார். அதன் காரணமாக அவரது பொறுப்பை அதே போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் கவனித்து வந்தார்.
இந்நிலையில் திருவொற்றியூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குள் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. குறிப்பாக தேரடி பகுதியில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்கப்படும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.
இதையடுத்து, மதுபான விற்பனையை தடுக்க தவறிய இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அவர் கடமை தவறியதாக கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை போலீஸ் கமிஷனர் பிறப்பித்து உள்ளார்.
