Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்..

அரியலூர் தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பேரிடர் கால நிவாரண பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு கோரிய நிதியினை உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும் எனவும், புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் தண்டபாணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!