Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இந்திய மக்கள் தொகை142.86 கோடி….. சீனாவை மிஞ்சிவிட்டோம்

ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம், ‘8 பில்லியன் உயிர்கள், எல்லையற்ற சாத்தியக்கூறுகள் உரிமைகள் மற்றும் தேர்வுகளுக்கான வழக்கு’ என்ற தலைப்பில் 2023 ம் ஆண்டுக்கான உலக மக்கள்தொகை அறிக்கையை இன்று (புதன்கிழமை) வெளியிட்டது. அதில், உலக மக்கள்தொகையில் சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடத்தில் உள்ளது.

ஐநா தகவலின் படி, இந்தியாவின் மக்கள்தொகை142.86 கோடியாகவும், சீனாவின் மக்கள் தொகை  142.57கோடியாகவும் உள்ளது. அதாவது சீனாவை விட இந்தியாவின் மக்கள் தொகை 29 லட்சம் அதிகமாக உள்ளது.

1950 ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் நிதியம் மக்கள்தொகை தரவுகளை சேகரித்து வெளியிடத் தொடங்கிய பிறகு இந்தியாவின் மக்கள்தொகை சீனாவை முந்தியது இதுவே முதல் முறை.

ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தின் அறிக்கைபடி, இந்தியாவின் மக்கள்தொகையில் 25 சதவீதம் பேர் 0-14 வயதுக்குட்பட்டவர்கள், 18 சதவீதம் பேர் 10-19 வயதுக்குட்பட்டவர்கள், 26 சதவீதம் பேர் 10-24 வயதுக்குட்பட்டவர்கள், 68% பேர் 15-64 மற்றும் 7% பேர்  65 வயதுக்கு மேற்பட்டவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் கிட்டத்தட்ட 200 மில்லியன் (20 கோடி) பேர் உள்ளதாவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!