வெளிநாட்டுச் சுற்றுலாத் தலமான தாய்லாந்தில், இந்தியப் பெண் ஒருவர் பாத் டவல் (Towel) மட்டுமே அணிந்து கொண்டு நடுரோட்டில் நடனமாடிய Towel dance sparks debate வீடியோ இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அந்தப் பெண் தாய்லாந்தின் இரவுச் சந்தை போன்ற மக்கள் நிறைந்த தெருவில், பாலிவுட் பட பாடலுக்கு டவலுடன் நடனமாடி ரில்ஸ் வீடியோவை படமாக்கியுள்ளார்.ஷாருக்கான் மற்றும் கஜோல் நடித்த பிளாக்பஸ்டர் படமான ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே’ படத்தில் இடம்பெற்ற மேரே க்வாபோன் மே என்ற பாடலுக்கு தான் அந்த பெண் நடனமாடியுள்ளார்.
இது போன்ற செயல்கள் சுற்றுலாத் தலங்களில் உள்ளூர் கலாச்சாரத்தை அவமதிப்பதாகவும், இந்தியப் பயணிகளின் நற்பெயரைக் கெடுப்பதாகவும் இணையத்தில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
இந்த வீடியோ கடந்த மே 24ம் தேதி எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்தச் செயல் பொது இடங்களில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கம் மற்றும் பொறுப்புணர்வு பற்றிய பெரிய விவாதத்தை இணையத்தில் உருவாக்கியது.பொது இடத்தில் அதுவும் வெளிநாட்டில் சென்று இப்படியெல்லாம் வீடியோ எடுத்து பதிவிடுவது நம் நாட்டு மக்கள் மீதான எண்ணத்தை மாற்றி விடும்.
இணையவாசி ஒருவர், “உண்மையிலேயே இந்த மாதிரி செயல் அருவருப்பானது. தயவுசெய்து வெளிநாட்டினர் முன்னிலையில் நம் மக்களைக் களங்கப்படுத்தாதீர்கள்.
