ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 15-வது தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் சுஜீத் கல்கல் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதன்மூலம் இந்தியாவின் தங்கப் பதக்க எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தியா 75 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் பதக்கப் பட்டியலில் இந்தியா 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஆசிய விளையாட்டில் இந்திய வீரர், வீராங்கனைகளின் பதக்க வேட்டை தொடர்ந்து வருகிறது.
ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு 15-வது தங்கம்
