மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,760 கனஅடியில் இருந்து 7,151 கனஅடியாக அதிகரித்துள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக அணையின் நீர்மட்டம் 78.81 அடியில் இருந்து 79.17 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1,500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், அணையின் நீர் இருப்பு 41.14 டி.எம்.சி.யாக உள்ளது.
