Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சமூக நீதி விடுதியில் ஆய்வு! மாணவிகளுடன் உணவருந்திய அமைச்சர்கள்

கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சமூக நீதி மாணவ, மாணவியர் விடுதிகளில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் மற்றும் பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் விஜயலஷ்மி ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

மாவட்ட கலெக்டர் முத்துக்குமரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வின்போது, மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 4 பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளை அமைச்சர்கள்

பார்வையிட்டு, மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவு, சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர்.

குறிப்பாக, கரூர் வெங்ககல்பட்டி சமூக நீதி விடுதியில் கடந்த மாதம் தரமற்ற உணவு வழங்கப்பட்டதாகக் கூறி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், அந்த விடுதியில் அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, மாணவிகளுடன் அமர்ந்து அமைச்சர்கள் உணவு அருந்தினர். தொடர்ந்து,

மாணவிகளிடம் அவர்களின் தேவைகள் மற்றும் குறைகள் குறித்து கேட்டறிந்ததுடன், அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

மாணவிகளின் புகாரைத் தொடர்ந்து, விடுதியில் பணியாற்றிய சமையலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அவருக்குப் பதிலாக புதிய சமையலர் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்

சம்பத்குமார் தெரிவித்தார்.

மேலும், சம்பந்தப்பட்ட சமையலருக்கு குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

விடுதிகளில் சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளுக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், பணியாளர் பற்றாக்குறை உள்ள இடங்களில் தேவையான பணியாளர்களை படிப்படியாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் மின்வெட்டு அதிகரித்து வருவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தனது துறை சார்ந்த கேள்விகளுக்கு விரிவாக பதிலளிப்பதாகவும், 100 நாட்களில் ஒவ்வொரு துறைக்கும் உரிய கவனம் செலுத்தப்பட்டு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், கரூர் மாவட்டத்தில் நான்காவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களின் பிரச்சினைகள் குறித்தும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பொதுவான பிரச்சினைகளுக்கு, அரசின் நிதிநிலைக்கு ஏற்ப படிப்படியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்தார்.

இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 100% வெற்றி பெறுவது உறுதி என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

error: Content is protected !!