உதகையில் தேர்தல் பரப்புரைக்காக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வந்திறங்கிய ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், உதகை தொகுதி பாஜக வேட்பாளர் போஜராஜனை ஆதரித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பரப்புரையில் ஈடுபட வந்தார்.
இந்நிலையில், உதகைக்கு அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனைக்கு அண்ணாமலை முழு ஒத்துழைப்பு அளித்தார். இந்த சோதனைக்கு பின்னர் பறக்கும் படையினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
