Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் வெடித்த உட்கட்சி மோதல்- அதிரடியாக இடம் மாறிய திமுக நிகழ்ச்சி

திருச்சியில் வெடித்த உட்கட்சி மோதல்- அதிரடியாக இடம் மாறிய திமுக நிகழ்ச்சி

நேரு ஆதரவாளர்கள் Vs வைரமணி அணி- திருச்சியில் வெடித்த உட்கட்சி மோதலால் அதிரடியாக இடம் மாறிய திமுக நிகழ்ச்சி

திருச்சி மாவட்ட திமுகவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உட்கட்சி மோதல் மற்றும் கோஷ்டிப் பூசல் காரணமாக, காலம் காலமாக சாஸ்திரி சாலையில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்று வந்த முரசொலி மாறனின் பிறந்தநாள் விழா, முதல்முறையாக கலைஞர் அறிவாலயத்திற்கு மாற்றப்பட்ட சம்பவம் தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் ஆதரவாளர்கள் ஒருபுறமும், அவர்களுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் மாவட்டச் செயலாளர் வைரமணி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான சௌந்தரபாண்டியன், பழனியாண்டி ஆகியோர் மறுபுறமும் அணிதிரண்டு நிற்பதால் திருச்சியில் கடுமையான கோஷ்டிப் பூசல் நிலவுகிறது. இரு தரப்பினருக்கும் இடையே உச்சக்கட்ட பகை நிலவி வரும் சூழலில், சாஸ்திரி சாலையில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்திற்குள் இவர்கள் மூவரும் வரக்கூடாது என உத்தரவு வந்துள்ளதாக கூறப்படுகிறது ?
இதன் காரணமாக திமுக மாவட்ட அலுவலகத்தில் இருந்து கலைஞர் அறிவாலயத்திற்கு இடம் அதிரடியாக மாற்றப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும் முரசொலி மாறனின் பிறந்தநாளின் போது சாஸ்திரி சாலை மாவட்ட அலுவலகத்தில் உள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு உட்கட்சி பூசல் காரணமாக விழா கலைஞர் அறிவாலயத்திற்கு மாற்றப்பட்டதை அறிந்த கட்சியினரும் தொண்டர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தலைவர்களின் பிறந்தநாள் விழாவைக் கூட சுமுகமாக நடத்த முடியாமல், கோஷ்டிப் பூசலால் இடம் மாற்றும் அளவிற்கு கட்சி நிர்வாகிகளிடையே மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளதா என திருச்சி பொதுமக்கள் மற்றும் திமுக உடன்பிறப்புகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சமீபத்தில் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாள் அன்று முன்னாள் அமைச்சர் கே என் நேரு மாலை அணிவித்து சென்ற பிறகு, வைரமணி, காடுவெட்டி தியாகராஜன், பழனியாண்டி, ஆகியோர் தனியாக வந்து மாலையிட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!