Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு……இன்று 300 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

தொழில் வளர்ச்சியை பெருக்கவும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிக்கொடுக்கவும் தமிழகத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2 நாட்கள் நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது.

இந்த மாநாட்டில் 50 நாடுகளில் இருந்து 450-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், தமிழ்நாட்டின் முன்னணி தொழில் அதிபர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் முதல் நாளிலேயே ரூ.5½ லட்சம் கோடி ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த நிலையில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் 2 ம் நாள் அமர்வு  இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. மின்சார வாகனம், விவசாயம், உணவுத்துறை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் அமர்வுகள் நடைபெற உள்ளன. மாநாட்டில் சிறு, குறு தொழில் முதலீட்டாளர்கள் சந்திப்பு மதியம் 1 மணிக்கு நடைபெற உள்ளது. இன்று பல கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 300 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன.  மாநாட்டின் இறுதி நிகழ்வில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். மாநாட்டில் ஈர்க்கப்பட்ட ஒட்டுமொத்த முதலீட்டு விவரங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை வெளியிடுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!