Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விஜய் திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட உள்ளாரா? – போஸ்டரால் பரபரப்பு

நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் அவர்களின் பிறந்தநாள் வருகின்ற 22ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. விஜய் அரசியலில் நுழைந்து முதல் மாநாடு நடத்தி மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் நியமித்த பிறகு இந்த பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.இந்நிலையில் அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே அவருக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர்கள் பிளக்ஸ் பேனர்கள் போன்றவை அமைத்து வருகின்றனர். அதே போல திருச்சி புத்தூர் நால்ரோடு பகுதியில் திருச்சி மாநகர் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் தலைவா கர்ணா என்பவர் சுவரொட்டி ஒட்டியுள்ளார் அந்த சுவரொட்டியில் ஜூன் 22 பிறந்தநாள் காணும் திருச்சி திருவரங்கம் தொகுதி மக்களின் மனம் கவர்ந்த வேட்பாளரை வாழ்க பல்லாண்டு என குறிப்பிட்டு ஒட்டப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றன. ஏற்கனவே மதுரை மேற்குத் தொகுதியில் இதே போன்று போஸ்டர் மதுரை ரசிகர்கள் சார்பாக ஒட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
error: Content is protected !!