இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டுகால இசை பயணத்தை போற்றும் வகையில், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா நாடாளுமன்றத்தில் அவருக்கு உயரிய சிறப்பு கவுரவம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் ‘Australia Post’ சார்பில் இளையராஜாவின் திருவுருவ படம் தாங்கிய வரையறுக்கப்பட்ட பதிப்பிலான நினைவு அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன. ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கவுரவிக்கப்பட்டது நெகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்த இளையராஜா, இதற்கு காரணமான விக்டோரியா அரசுக்கும், தன் இசைக்கு உயிரூட்டிய மக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
