Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவை ஈஷாவில் மகா சிவராத்திரி விழா.. ஜனாதிபதி பங்கேற்பு ..

கோவை ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா விமர்சையாக நடத்தப்படடு வருகிறது. இந்த ஆண்டு விழாவில் தமிழ்நாட்டிற்கு 2 நாள் பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்துகொண்டார். ஈஷா மையத்தில் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவில் ஜனாதிபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முன்னதாக ஈஷாவுக்கு வந்தவுடன் தீர்த்த குளத்தை பார்வையிட்ட திரவுபதி முர்மு, அங்கு கால் நனைத்து, தியான பீடத்தில் வழிபட்டார். நாளை உதகை வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர்களிடையே உரையாற்றுகிறார். இதனிடையே கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். குறிப்பாக ஆதியோகி சிலை முன்பு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளிலும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!