இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் ஒரு வாரத்தில் மட்டும் 77 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. சராசரியாக ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் 11 குழந்தைகள் காயமடைகின்றனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருவதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அப்பாவி மக்கள் உயிரிழப்பது தொடர்வதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.
