கரூர் சம்பவத்திற்குப் பிறகு வீட்டை விட்டு வெளியே வராத விஜய், இப்போது வீரவசனம் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரூர் சம்பவத்துக்குப் பிறகு தவெக அலுவலகமே பூட்டப்பட்டது. 72 நாட்கள் வெளியில் வராமல் வீட்டிலேயே இருந்தவர் விஜய். எந்தக் கொம்பனாலும் அதிமுகவை அசைக்கவும் முடியாது, வீழ்த்தவும் முடியாது என்றார்.
விஜய் வீரவசனம் பேசுவது வேடிக்கை – இபிஎஸ் கலாய்
