Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அழகிரி மருமகன் வீட்டில் ஐடி ரெய்டு..!

தமிழகத்தின் மிகப் பிரபலமான அரசியல் குடும்பம் என்றால் அது கலைஞர் மு.கருணாநிதியின் குடும்பம் என சொல்லலாம். மாணவப் பருவத்தில் இருந்து தீவிரமாக அரசியலை ஈடுபடுத்திக் கொண்ட கருணாநிதி தமிழ்நாடு அரசியலில் உச்ச பதவியான முதல்வர் பதவியை அலங்கரித்தவர்.

சில நேரங்களில் பிரதமர் பதவி கூட கலைஞருக்கு கிடைக்கும் வாய்ப்பு இருந்ததாக சொல்வார்கள். கலைஞர் மட்டுமல்ல அவரது குடும்பமே அரசியல் குடும்பம் தான். முக அழகிரி, மு க ஸ்டாலின், முரசொலி மாறன், தயாநிதி, உதயநிதி, கனிமொழி என அந்த பட்டியல் நீண்டு கொண்டு செல்லும்.

கலைஞர் கருணாநிதி மனைவி தயாளு அம்மாவின் பிள்ளைகள் தான் முக அழகிரி, முக ஸ்டாலின், செல்வி, தமிழரசு ஆகியோர். இதில் செல்வியும் தமிழரசுவும் அரசியலில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை.கலைஞரின் துணைவியாரான ராசாத்தி அம்மாவின் மகள்தான் கனிமொழி. அவர் திமுக துணை பொது செயலாளடாகவும் எம்பியாகவும் இருக்கிறார். கலைஞர் இருந்தபோது டெல்லிக்கு மாறன், சென்னைக்கு ஸ்டாலின், மதுரைக்கு மு.க.அழகிரி என இருந்தது. மாறன் மறைந்த பிறகு அவரது மகன் தயாநிதி மாறன் எம்பி ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.எம்.கே. அழகிரியின் மகளான காயல்விழி ஒரு கவிஞர். இவர் 2009-ல் திமுகவின் மகளிர் அணியின் பிரச்சாரச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இவர் கட்டிடக் கலைஞரான வெங்கடேஷை மணந்துள்ளார்.

இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மருமகன் வெங்கடேசன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை சாஸ்திரி நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று வரும் இந்த சோதனையையொட்டி, பாதுகாப்பு கருதி அங்கு சிஆர்பிஎப் (CRPF) போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.


தேர்தல் நெருங்கும் வேளையில், பணப்பட்டுவாடா தொடர்பான புகாரின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்படுவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் திடீர் சோதனையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதோடு, அரசியல் வட்டாரத்திலும் இது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!