Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மீண்டும் திமுக தான் … Poll Tracker கருத்து கணிப்பு முடிவுகள் வெளியீடு

போல் ட்ராக்கர் (Poll Tracker) இன்று வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளில் திமுக கூட்டணி 42.7% வாக்கு விகிதத்துடன் 172 முதல் 178 இடங்களை வென்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணி 30.3% வாக்குகளுடன் 46 முதல் 52 இடங்களைப் பிடித்து இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் என கணித்துள்ளது.

தவெக 6 முதல் 12 இடங்கள் வரை வென்று, 19.2% வாக்குகளைப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சி 0 முதல் 2 இடங்கள் வரை மட்டுமே பெறும் என்றும், 5.1% வாக்குகள் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மற்ற கட்சிகள் சேர்த்து 2.7% வாக்குகள் மட்டுமே பெறும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியே முன்னிலையில் இருக்கிறது என்பதை போல் ட்ராக்கர் (Poll Tracker) கருத்துக் கணிப்பு உறுதிப்படுத்தியிருக்கிறது.

error: Content is protected !!