Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

”ஜெயிலர் 2”- 4 நாட்களில் 424.25 கோடியை குவித்து அசத்தல்

”ஜெயிலர் 2”- 4 நாட்களில் 424.25 கோடியை குவித்து அசத்தல்

இந்திய திரையுலகின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கடந்த 15ம் தேதி வெளியாகிய திரைப்படம் ஜெயிலர் 2. அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள இந்த படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் குவிந்து வருகிறது. 

வசூல் மழை:

நேர்மறை விமர்சனங்களால் படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. படம் வெளியாகிய 4வது நாளான ஞாயிற்றுக்கிழமையான நேற்று மட்டும் ரூபாய் 55.85 கோடி வசூலை குவித்துள்ளது. தமிழில் மட்டும் 15 ஆயிரத்து 473 காட்சிகள் இந்த படம் திரையரங்குகளில் நேற்று ஓடியது.

தெலுங்கிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த படம் நேற்று மட்டும் 2 ஆயிரத்து 234 காட்சிகளில் 9.50 கோடி ரூபாய் வசூலைக் குவித்துள்ளது. இந்தியில் 4வது நாளான நேற்று மட்டும் ரூபாய் 5.75 கோடி வசூலைக் குவித்துள்ளது. கன்னடத்தில் 164 காட்சிகளில் நேற்று திரையிடப்பட்டு 0.65 கோடி வசூலைக் குவித்துள்ளது. வெளிநாடுகளில் மட்டும் ஞாயிற்றுக்கிழமையான நேற்று 40 கோடி வசூலை ஜெயிலர் 2 குவித்துள்ளது.

400 கோடியை கடந்த ஜெயிலர் 2:

உலகளவில் ஜெயிலர் 2 படம் கடந்த 4 நாட்களில் மட்டும் ரூபாய் 424.25 கோடியை குவித்து அசத்தியுள்ளது. சனிக்கிழமை ரூபாய் 47.25 கோடி வசூல் கிடைத்த நிலையில், இந்தியாவில் நேற்று மட்டும் ரூபாய் 55.85 கோடி வசூல் கிடைத்துள்ளது. இன்றும் நாளையும் தொடர் விடுமுறை என்பதால் இந்த இரு நாட்கள் மிகப்பெரிய வசூல் மழையை ஜெயிலர் 2 எட்டும் என்று கருதப்படுகிறது.

500 கோடி ரூபாய் வசூலை ஜெயிலர் 2 எட்டுவது இன்றே என்பது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது. ரூபாய் 1000 கோடி வசூல் என்பது மட்டும் சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது. நேற்று காலை காட்சிகள் தவிர மதியம், மாலை மற்றும் இரவு காட்சிகள் 88 சதவீதம் இருக்கைகள் நிரம்பி வழிந்தது.

நிரம்பி வழியும் தியேட்டர்கள்:

சென்னையைப் பொறுத்தமட்டில் நேற்று மட்டும் 1195 காட்சிகள் ஜெயிலர் 2 திரையிடப்பட்டது. இதில் மதியம், மாலை மற்றும் இரவு காட்சிகளில் 96 சதவீதம் இருக்கைகள் நிரம்பியிருந்தது. சென்னை மட்டுமின்றி மாநிலத்தின் மற்ற நகரங்களிலும் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

நெல்சன் இயக்கியுள்ள இந்த படத்தில் ரஜினிகாந்துடன் ஸ்டார் நடிகர்களான மிதுன் சக்கரவர்த்தி, மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், விஜய் சேதுபதி, ஹ்ரித்திக் ரோஷன், வித்யா பாலன், ரம்யா கிருஷ்ணன், சுராஜ், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படத்தில் மூர்த்தி கதாபாத்திரத்தில் நடித்துள்ள நமோ நாராயணாவின் கதாபாத்திரம் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்துள்ளது.

error: Content is protected !!