Skip to content
Home » ‘விக்ரம்’ படத்தின் வாழ்நாள் வசூலை ஒரே வாரத்தில் முறியடித்த ரஜினியின் ‘ஜெயிலர்’

‘விக்ரம்’ படத்தின் வாழ்நாள் வசூலை ஒரே வாரத்தில் முறியடித்த ரஜினியின் ‘ஜெயிலர்’

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஜெயிலர்’ திரைப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் ரசிகர்கள் இப்படத்தை திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். ‘ஜெயிலர்’ திரையரங்குகளில் வெளியாகி ஒரு வாரம் நிறைவடைந்த நிலையிலும் வரவேற்பு குறையவில்லை. இப்படம் உலகம் முழுவதும் ரூ.450 கோடிக்கு மேல் வசூல் செய்து உள்ளது.  2வது வார முடிவில் ஜெயிலர் உலக அளவில் ரூ.500 கோடி வசூல் கிளப்பில் இணையும் என கூறப்படுகிறது. கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் வாழ்நாள் வசூலையும் இப்படம் ஏழு நாட்களில் முறியடித்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!