Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

போர்க் கப்பல்களை அனுப்பும் திட்டம் இல்லை-ஜப்பான், ஆஸி அறிவிப்பு

US President Donald Trump speaking from the White House briefing room on June 12 2026 regarding the cancellation of military strikes on Iran.

ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்களை பாதுகாக்க, போர்க் கப்பல்களை அனுப்பும் திட்டம் இல்லை என ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் அறிவித்துள்ளது. அமெரிக்காவுக்கு ஆதரவாக நட்பு நாடுகள் போர்க் கப்பல்களை அனுப்ப உள்ளன என சில நாட்கள் முன்பு ட்ரம்ப் கூறி இருந்தார். தற்போது வரை எந்த நாடும் அனுப்பவில்லை. உலக நாடுகள் போர்க்கப்பலை ஹோர்முஸ் நீரிணைக்கு அனுப்புமாறு டிரம்ப் விடுத்த கோரிக்கையை ஆஸ்திரேலியா நிராகரித்தது. ஆஸ்திரேலியாவை தொடர்ந்து ஜப்பானும் தங்கள் நாட்டு கப்பலை அனுப்ப மாட்டோம் என்று மறுத்துவிட்டது.

ஈரான் போர் 3-ஆவது வாரத்தை எட்டியிருக்கும் நிலையில், தெற்கு மற்றும் கிழக்காசிய நாடுகள் கடும் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றன. அமெரிக்காவின் தாக்குதலை கண்டித்து, ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. இதனால் அமெரிக்காவுக்கு உதவும் மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய் ஏற்றுமதி, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், ஈரானுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும், போரை நிறுத்தும் உடன்படிக்கைக்கு அந்நாடு ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

இதற்கிடையில், ஈரான் போர் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், ஹார்முஸ் ஜலசந்தியை, ஈரானின் பிடியில் இருந்து மீட்க சுமார் 7 நாடுகள் தங்கள் போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் எனவும் டிரம்ப் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், இதுவரை எந்த நாடுகளும் டிரம்பின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை என்று கூறப்படுகிறது.

error: Content is protected !!