Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

85 வயது மூதாட்டியிடம் நகை மோசடி! போலீசார் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு!

85 வயது மூதாட்டியிடம் நகை மோசடி! போலீசார் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு!

85 வயது மூதாட்டியிடம் 5 பவுன் நகை மோசடி புகார் – மூதாட்டியை போலீசார் அலைகழிப்பதாக குற்றச்சாட்டு

திருச்சி மாவட்டம் சிறுகாம்பூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணுசாமி இவரது மனைவி பாக்கியம். கணவர் இறந்துவிட்ட நிலையில் பாக்கியம் தனியாக வசித்து வருகிறார்.

மூதாட்டியின் சகோதரி மகனான நீலமேகம் என்பவர் திருச்சி விமான நிலையம் அருகே காவேரி நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில் பாக்கியத்தின் 5 பவுன் தங்க நகைகளை நீலமேகம் பெற்றுக்கொண்டு, குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பித் தராமல் ஏமாற்றியதாக அவர் வாத்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த வழக்கில் நீலமேகம், மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ரூ.3 லட்சத்தை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

மேலும் செலுத்தப்படும் தொகையை வங்கியில் வட்டியுடன் வைப்பு செய்து, வழக்கு முடிவில் அதற்கான உரிமை குறித்து நீதிமன்றம் முடிவு செய்யும் என உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் குறிப்பிட்ட காலக்கெடு முடிந்து நீலமேகம் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் பணத்தை கட்ட தவறி உள்ளார் . இதுகுறித்து மூதாட்டி பாக்கியம் வாத்தலை காவல் நிலையத்தில் கடந்த சில மாதங்களாக புகார் தெரிவித்து உள்ளார் ஆனால் போலீசார் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையில் எடுக்காமல் மூதாட்டியை அழைக்களித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தனது வயது முதிர்வு காரணமாக அன்றாட தேவைகளுக்குக் கூட சிரமப்படுவதாகவும், நகைகளை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூதாட்டி திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். புகாரை விசாரித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

error: Content is protected !!