Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜெயங்கொண்டம் அருகே அடுத்தடுத்த 2கோயில்களில் பணம் நகை திருட்டு….

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ளது நத்தைவெளி கிராமம். இக்கிராமத்தில் பழமையான மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலை இன்று வழக்கம் போல திறக்க வந்த பூசாரி கோவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது உண்டியலில் இருந்த பணம் மற்றும் சாமியின் கழுத்தில் இருந்த நகையும் காணவில்லை. இது குறித்து கோவில் நிர்வாகிகள் விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதே போல் அருகில் உள்ள நரியங்குழி என்ற கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலிலும் உண்டியல் பணம் நகை திருடப்பட்டு உள்ளது குறித்தும் விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அடுத்தடுத்த

இரண்டு கோயில்களில் சுமார் ஒன்றரை லட்சம் மதிப்பிலான காணிக்கை பணம் மற்றும் எட்டு சவரன் தங்க நகை கொள்ளை அடிக்க பட்டிருப்ப தாக கோவில் நிர்வாகத்தினர் விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் தெரிவித்துள்ளனர். விக்கிரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!