Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கல்லூரி மாணவிகளுக்கு இடையிலான கபடி போட்டி…ஜமால் முகமது கல்லூரி சாம்பியன்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற திருச்சி, தஞ்சை மண்டலத்திற்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான மாணவியர்களுக்கான கபடி போட்டி
புதுகை, மாமன்னர் கல்லூரியில் நாக் அவுட் முறையில் நடைபெற்றது.
இதில் 30 கல்லூரி அணிகள் பங்கேற்ற கபடி போட்டியின் இறுதி போட்டியில் திருச்சி, ஜமால் முகமது கல்லூரி, திருச்சி, ஹோலி கிராஸ் கல்லூரியை 37-23 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று முதலிடம் பிடித்து பாரதிதாசன் பல்கலைக்கழக கபடி போட்டியில் சாம்பியன் அணியாக திகழ்ந்தது.
மூன்றாவது இடத்திற்கு நடைபெற்ற போட்டியில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஒரத்தநாடு அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை என்ற 38-10 புள்ளிகள் கணக்கில் வென்று மூன்றாவது இடம் பிடித்தது.
கபடி போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த ஜமால் முகமது கல்லூரி மாணவியர்களை கல்லூரி செயலாளர் மற்றும் தாளாளர், ஏ. கே. காஜா நஜீமுதீன், பொருளாளர் எம். ஜெ. ஜமால் முகமது, உதவி செயலாளர் கே. அப்துஸ் சமது, மதிப்புறு இயக்குனர் கே. என். அப்துல் காதர் நிஹால், முதல்வர், ஆர். ஜாகிர் உசைன், துணை முதல்வர் காஜா மொய்தீன், விடுதி இயக்குனர் கே. என். முகமது பாசில், பல்கலைக்கழக உடற்கல்வி துறை தலைவர் மற்றும் விளையாட்டு செயலாளர் பேராசிரியர்
ஏ. பழனிச்சாமி, கல்லூரி உடற்கல்வி இயக்குனர் பி. எஸ். ஷா இன் ஷா, ஆகியோர் வாழ்த்தினார்கள்.

error: Content is protected !!