Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கலைஞரின் 103வது பிறந்தநாள்… கரூரில் சாதாபுறா பந்தயப்போட்டி

முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு கரூரில் சாதா புறா பந்தயப் போட்டி தொடக்கம்.

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு கரூரில் திமுக சார்பில் சாதா புறா பந்தயப் போட்டி தொடங்கியது.

கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானம் மற்றும் 5 ரோடு அமராவதி ஆற்றங்கரை ஆகிய இரண்டு இடங்களில் இருந்து போட்டி தொடங்கப்பட்டது. போட்டியை திமுக மத்திய கிழக்கு

பகுதி செயலாளர் ஆர்.எஸ். ராஜா மற்றும் முன்னாள் மாவட்ட கழக துணைச் செயலாளர் பிரபு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

காலை 7 மணிக்கு தொடங்கிய முதல் சுற்றுப் போட்டியில் 40 ஜோடி சாதா புறாக்கள் கலந்து கொண்டன. தொடர்ந்து சுமார் 7 மணி நேரம் வானில் பறந்து, நடுவர்கள் குறிப்பிட்ட இடத்தில் புறாக்கள் வந்து அமர வேண்டும் என்பதே போட்டியின் முக்கிய விதியாகும்.

இந்தப் போட்டியின் இறுதிச்சுற்று வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. போட்டியில் வெற்றி பெறும் புறாக்களின் உரிமையாளர்களுக்கு கரூர் மாவட்ட திமுக செயலாளர் செந்தில் பாலாஜி சார்பில் முதல் பரிசு உள்ளிட்ட ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள், புறா வளர்ப்போர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு போட்டியைக் கண்டு ரசித்தனர்.

error: Content is protected !!