Skip to content

அமரனுக்கு பாராட்டு…….முதல்வர் ஸ்டாலினுக்கு….. கமல் நன்றி

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  அமரன் திரைப்படத்தை பார்த்து விட்டு அதில்  நடித்த  கலைஞர்களுக்கு பாராட்டு தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து படத்தயாரிப்பாளரான  கமல்ஹாசன் முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு  நன்றி தெரிவித்து வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

எங்களது அழைப்பை ஏற்று அமரன் திரைப்படத்தைப் பார்த்து ரசித்ததோடு, படத்தையும், அதில் பங்களிப்பாற்றிய கலைஞர்களையும் மனதார பாராட்டிய தமிழ்நாடு முதல்வரும், என் அன்பிற்கினிய நண்பருமான மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழ்நாட்டின் துணை முதல்-அமைச்சரும், என் அன்பு இளவலுமான உதயநிதி ஸ்டாலினுக்கும் எங்களது மனமார்ந்த நன்றி. முதல்-அமைச்சரின் பாராட்டு அமரனின் பெரும் வெற்றிக்கு அறிகுறி. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!