Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கந்துவட்டி விவகாரம்… கோவை அதிமுக பிரமுகர் கைது

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதி நகர் ஏ காலனியில் வசித்து வருவார் தீபா இவர் கடந்த 4மாதத்திற்கு முன்பாக முத்துகவுண்டன் லேஅவுட் சேர்ந்த அதிமுக நகர இளைஞரணி செயலாளர் செந்தில்குமார் என்பவரிடம் ஒரு லட்ச ரூபாய் கடனாக பெற்றுள்ளார் இதற்காக மாதம் பத்தாயிரம் கந்துவட்டி தரவேண்டுமென தெரிவித்ததாக கூறப்படுகிறது 3மாதங்களாக சரியாக வட்டி கட்டி உள்ளார் இந்த மாதம்வட்டி பணம் தர முடியாததால் செந்தில்குமார் தீபாவை தொடர்பு கொண்டு தொலைபேசியில் தகாத வார்த்தைகள் திட்டியதாகவும் பணத்தை திருப்பி கேட்டு தொடர்ந்து மிரட்டல் விட்டதால் தீபா கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார் இதனைத் தொடர்ந்து கிழக்கு காவல் நிலைய போலீசார் அவர் மீது கந்து வட்டி மற்றும் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பொள்ளாச்சியில் அதிமுக பிரமுகர் கந்துவட்டி புகாரின் பேரில் கைது செய்யப்பட்டது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

error: Content is protected !!