Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கிருஷ்ணராயபுரம் வேட்பாளரை ஆதரித்து கனிமொழி வாக்கு சேகரிப்பு

தேர்தல் வாக்குறுதியை ஜீரோவாக நிறைவேற்றிய பெருமை எடப்பாடிக்கு மட்டுமே உண்டு என கிருஷ்ணராயபுரம் வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்த திமுக எம்பி கனிமொழி பேச்சு.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் சி.கே. ராஜாவை ஆதரித்து, கனிமொழி எம்.பி. ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கிருஷ்ணராயபுரம் கடைவீதியில் நடைபெற்ற இந்த பிரச்சாரத்தில், உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் கனிமொழி கேட்டுக்கொண்டார். அரசின் சாதனைகள், மக்கள்

நலத் திட்டங்கள் மற்றும் தொகுதி மேம்பாட்டு திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கினார்.

பிரச்சார வாகனத்தில் பேசிய கனிமொழி:
கலைஞர் முதன்முதலாக வெற்றி பெற்ற தொகுதி குளித்தலை அதன் பிறகு தோல்வி என்பது அவருக்கு கிடையாது எந்த சட்டமன்ற தேர்தலிலும் தோல்வியை பார்க்காத தலைவர் கருணாநிதி,

அதிமுக கூட்டணியின் தலைவர்கள் தற்போது டெல்லியில் உள்ளார்கள் அந்தக் கூட்டணி தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்யக்கூடிய கூட்டணி, தமிழ்நாட்டிற்கு நிதி கொடுக்காத கூட்டணி, எடப்பாடி பழனிச்சாமி அந்த கூட்டணியில் உள்ளார் அவர் சொந்தக் கட்சிக்கே துரோகம் செய்யக்கூடியவர் தன்னைத் தவிர வேறு யாரும் அந்த கட்சியில் இருக்கக் கூட என்று நினைப்பவர், அவர் யார் காலில் விழுந்து பதவி வாங்கினாரோ அந்த அம்மையாரையே அந்தக் கட்சியில் இடமில்லை என்று ஒதுக்கி வைத்துள்ளார்.

அவருக்கு முன்னாள் முதலமைச்சர் பொறுப்பில் இருந்த ஓபிஎஸ்சை நீங்கும்படி செய்திருக்கக் கூடியவர் தற்போது ஓபிஎஸ் அவர்கள் தமிழ்நாட்டை காப்பாற்ற முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினால் தான் முடியும் என்று தற்போது இணைந்துள்ளார்.

கூட்டணியை வேண்டாம் என்று வெளியே வந்து விட்டு மீண்டும் சந்தர்ப்பவாதத்தால் கூட்டணியை அமைத்துள்ளார்.

அவர் சொல்கிறார் ஸ்டாலின் எந்த வாக்குறுதியை கொடுத்தாலும் நிறைவேற்றித் தரவில்லை என்று ஆனால் நம்முடைய முதலமைச்சர் கலைஞர் எப்படி கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றினாரோ அதேபோல மக்களுக்கு கொடுத்துள்ள வாக்குறுதிகளை அனைத்தும் நிறைவேற்றி தந்துள்ள தலைவர் நம்மை போல அதிமுகவினரும் தேர்தல் அறிக்கை வெளியிடுவார்கள் ஆனால் அதனை யாரும் படிக்க மாட்டார்கள் ஆனால் அந்தத் தேர்தல் அறிக்கையில் 27 வது பக்கத்தில் 31 வது வாக்குறுதி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கைப்பேசி விலையின்றி வழங்கப்படும் என்று கூறினார் யாருக்காவது அந்த செல்போன் கிடைத்ததா? தேர்தல் வாக்குறுதியை ஜீரோவாக நிறைவேற்றிய பெருமை எடப்பாடிக்கு உண்டு, டெல்லியில் இருந்து தற்பொழுது பிரச்சாரத்திற்கு அடிக்கடி வருகிறார்கள் ஆனால் சிலிண்டர் விலையை கட்டுப்படுத்த அவர்கள் தயாராக இல்லை இந்த ஹோட்டல் தங்கும் விடுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கேஸ் இல்லை, வீட்டில் உள்ளவர்கள் கேஸ் பதிவு செய்தால் எப்போது கிடைக்கும் என்று தெரியவில்லை அதனுடைய விலை எப்போது ஏறும் என்று தெரியவில்லை இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்கள் தேர்தலை மட்டுமே மையப்படுத்தி உள்ளனர் மேக் இன் இந்தியா மேக்கின் இந்தியா என்று பிரதமர் சொல்கிறார் ஆனால் எதுவுமே இந்தியாவில் செய்யவில்லை அனைத்தையும் வெளிநாட்டில் இருந்து வாங்கியதால் தான் இன்று கேஸ் சிலிண்டருக்கு கூட காத்துக் கிடக்க வேண்டிய நிலையில் உள்ளது தமிழ்நாட்டினுடைய எதிர்காலத்திற்காக பாடுபடக்கூடிய நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தை மீண்டும் ஆட்சியில் அமர வைப்போம் என்று கூறினார்.

error: Content is protected !!