Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கிருஷ்ணராயபுரத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து கனிமொழி எம்பி தீவிர பிரச்சாரம்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் சி.கே. ராஜாவை ஆதரித்து, கனிமொழி கருணாநிதி எம்.பி. அவர்கள் ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கிருஷ்ணராயபுரம் கடைவீதியில் நடைபெற்ற இந்த பிரச்சாரத்தில், உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் கனிமொழி கருணாநிதி கேட்டுக்கொண்டார். அரசின் சாதனைகள், மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் தொகுதி மேம்பாட்டு திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கினார்.

மேலும், வரவிருக்கும் தேர்தலில் திமுக வெற்றி பெறுவது உறுதி என நம்பிக்கை தெரிவித்துள்ளார். கிருஷ்ணராயபுரம் தொகுதி முழுவதும் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த திமுக உறுதியாக செயல்படும் என்றும் அவர் கூறினார்.

இந்த நிகழ்வில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு உற்சாக வரவேற்பளித்தனர். கடைவீதியெங்கும் கட்சிக் கொடிகள் அசைந்து, முழக்கங்கள் முழங்க பிரச்சாரம் உற்சாகமாக நடைபெற்றது.

error: Content is protected !!