Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கலைஞர் கருணாநிதியின் 100வது பிறந்த நாள்… “பராசக்தி ஹீரோடா” போஸ்டர்.

திமுக முன்னாள் தலைவரும் தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சியினர், சினிமாத் துறையினர், பொதுமக்கள் என பலரும் கருணாநிதி யின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் கருணாநிதியின் அரசியல் வாழ்க்கை சினிமா வாழ்க்கை என பல்வேறு விஷயங்களை நினைவு கூறி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கோவை மாநகர திமுக இளைஞரணி சார்பில் உக்கடம், கோட்டைமேடு, ஆகிய பகுதிகளில் கலைஞரின் நூறாவது நாள் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அந்த போஸ்டரில் “கொற்றக்கொடையா? கொள்கையா? எது வேண்டும் எனில் கொள்கையை விற்று பிழைக்க வேறு நபர் பார் என்போம்!”. என்ற வசனமும் “பராசக்தி ஹீரோடா!” என்ற வாசகமும், “எங்கள் வாழ்க்கை ஏட்டில்

எந்தப் பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம், பகுத்தறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம் இதுதான்” என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.

இந்த போஸ்டர்கள் இளைஞரணி துணை அமைப்பாளர் C.M.S.மசூது தலைமையில் ஒட்டப்பட்டுள்ளன.

அதே சமயம் ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்து காரணமாக திமுக சார்பில் கலைஞரின் 100வது பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!