கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் காரணமாக 41 நபர்கள் உயிரிழந்தனர்.
இதில் 100க்கும் மேற்பட்டோர் காயமுற்று சிகிச்சைக்கு பின் வீடு திரும்பி உள்ளனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணை நாள்தோறும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று வேலுச்சாமிபுரம் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த இரண்டு காவலர்கள் தற்போது சிபிஐ விசாரணைக்காக தான்தோன்றி மலை பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகைக்கு ஆஜராகி உள்ளனர்.
இதுவரை வேலுச்சாமிபுரம் பகுதியில் உள்ள பொதுமக்கள், வணிக நிறுவன உரிமையாளர்கள், பணியில் இருந்த காவலர்கள், தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர்கள், இந்த துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் என பல்வேறு தரப்பினம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது இரண்டு காவலர்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவது என்பது குறிப்பிடத்தக்கது.

