Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் 5வது நாளாக வருமானவரித்துறை சோதனை….

கரூரில் 5-வது நாளாக தொடரும் வருமானவரித்துறை சோதனை. அமைச்சர் எ.வ வேலுக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த 3-ம் தேதி முதல் தொடங்கிய சோதனை பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் நான்கு இடங்களில் சோதனை தொடங்கினர்

இரண்டு இடங்களில் சோதனை நிறைவடைந்த நிலையில்,தொடர்ந்து
காந்திபுரம் பகுதியில் உள்ள சுரேஷ் என்பவர் நிதி நிறுவனம், வையாபுரி நகர் பகுதியில் உள்ள அவரது வீடு என இரவிலும் சோதனை நடைபெற்றது. மத்திய பாதுகாப்பு படை போலீசாரே பாதுகாப்பில் அமர்த்திவிட்டு,இரவில் சற்று ஓய்வு எடுத்த வருமானவரித்துறை அதிகாரிகள் அதன் பின் தொடர்ந்து 5-வது நாட்களாக சோதனை ஈடுபட்ட வருகின்றனர்.

சுரேஷ் என்பவரின் நிதி நிறுவனத்தில் கோப்புகள் மற்றும் கணினி உள்ளிட்டவைகளை தொடர்ந்து ஆய்வுக்கு உட்படுத்தி வருகின்றனர் என கூறப்படுகிறது. இந்த சோதனையில் மத்திய பாதுகாப்பு படை போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சோதனையானது இன்று முழுவதும் நடை பெரும் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!