Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் மாவட்டத்தில் 19வது கலெக்டராக தங்கவேல் பதவி ஏற்பு….

கரூர் மாவட்ட ஆட்சியராக இருந்த பிரபு சங்கர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, கரூர் மாவட்ட ஆட்சித் தலைவராக தங்கவேல் இன்று 19வது ஆட்சியராக பதவி ஏற்றுக் கொண்டார். கரூர் மாவட்டத்தில் அரசு திட்டங்களையும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்களின் மீதும் முடிந்தவரை நடவடிக்கை எடுப்பேன் என உறுதி அளித்தார். மேலும் பொது மக்களின் குறைகள் மற்றும் பிரச்சனைகள் குறித்து செய்தியாளர்கள் நேரடியாக தன்னை தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம் என்று கூறினார். அவருக்கு ஆட்சியர் பொறுப்பு வகித்த மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் பொறுப்புகளை ஒப்படைத்தார். அதனை தொடர்ந்து அரசு அலுவலர்கள் வரவேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!