Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் கல்யாணவெங்கட்ரமண கோவில் கும்பாபிஷேகம்- VSB பங்கேற்பு

தென்திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர் தாந்தோன்றி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா: தமிழில் மந்திரம் ஓதி வெகு விமரிசையாக நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு ஆலய அருகே பிரத்தியேகமாக யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, காவிரி

ஆற்றிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தத்திற்கு நான்கு கால யாக பூஜைகள் நடைபெற்று.

தொடர்ந்து கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் கலசத்தினை சிவாச்சாரியார் மேலத்தலங்கள் முழங்க தலையில் சுமந்தவாறு கோவிலை சுற்றி வளம் வந்த பிறகு கோபுர கலசத்தை வந்தடைந்தது பின்னர் கலசத்திற்கு சந்தன பொட்டிட்டு வண்ண மாலைகள் அணிவித்த பின்னர் அஷ்டபந்தன மகா கும்பாபிஷே விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதில் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தான்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற கும்பாபிஷே

விழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டு சிறப்பு பேருந்துகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

குறிப்பாக சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு போலீசார் பேரிக்காடுகள் அமைத்து பாதுகாப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

error: Content is protected !!