Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா…. கரூர் எஸ்பி ஆலோசனை… 1200 போலீசார் பாதுகாப்பு..

கரூரில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் வைகாசி பெருவிழா கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி இன்று மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது. இதையொட்டி 1200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கரூர் தனியார் விடுதியில் எஸ்.பி சுந்தரவதனம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். திருவிழா சமயத்தில் போக்குவரத்தை சரி செய்யவும்,

அசம்பாவிதங்களை தவிர்க்கவும் திருச்சி மண்டலத்துக்குட்பட்ட திருச்சி, தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மூன்று கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 16 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், 30 ஆய்வாளர்கள், 80க்கும் மேற்பட்ட உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 1200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!